உடல் பருமனைக் குறைக்க செய்த அறுவை சிகிச்சையால் புதுச்சேரி வாலிபர் பலி - போலீசில் புகார்

உடல் பருமன் காரணமாக சென்னை பல்லாவரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த வாலிபர் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பல்லாவரம்,

புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரான இவர், மார்க்கெட் கமிட்டி ஊழியராக உள்ளார். இவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என 2 மகன்கள். இவர்கள் இரட்டையர்கள் ஆவர்.

இவர்களில் 26 வயதான ஹேமசந்திரன், பி.எஸ்சி, ஐ.டி. முடித்து விட்டு டிசைனிங் பணியில் உள்ளார். ஹேமராஜன், சித்தா பார்மசிஸ்ட் பணியில் உள்ளார். ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் 'கார்டியாக் அரெஸ்ட்' காரணமாக இறந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் இதுபற்றி சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com