தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தளவாட பொருட்களை திருடிய 10 பேர் கைது

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தளவாட பொருட்களை திருடிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தளவாட பொருட்களை திருடிய 10 பேர் கைது
Published on

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் தளவாட பொருட்களை திருடிய 10 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருட்டு

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில், மின்நிலையத்துக்கு தேவையான தளவாடப் பொருட்களை வைப்பதற்கான பண்டகசாலை உள்ளது. இந்த வைக்கப்பட்டிருந்த தாமிர நிக்கல் குழாய்கள், கன்டென்சர் குழாய்கள் உள்ளிட்ட ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடலில் படகு மூலம் வந்து பொருட்களை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

கைது

தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட தெர்மல்நகரை சேர்ந்த ரசால் மகன் ஜெயபிரேம்சிங் (வயது 42), முத்தையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த மாசானமுத்து (38), ராஜீவ்நகரை சேர்ந்த மதன் (26), முத்துநகரை சேர்ந்த பிரகாஷ் (26), சுப்பிரமணி (27), கோயில்பிள்ளை நகரை சேர்ந்த குழந்தைபாண்டி (26), பெரியசாமிநகரை சேர்ந்த கணேசமூர்த்தி (31), அழகர் (27), ஊரணி ஒத்தவீட்டை சேர்ந்த சந்தணராஜ் (26), முத்தையாபுரத்தை சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் மாரிமுத்து (43) ஆகிய 10 பேரையும் போலீசார் கைது 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com