அரசு பள்ளிக்கு இளநீர் விற்கும் பெண்ணின் நிதி உதவி - ‘மன் கீ பாத்’ உரையில் பிரதமர் பாராட்டு

அரசு பள்ளி கட்டிடத்திற்காக நிதி உதவி அளித்த தாயம்மாளுக்கு ‘மன் கீ பாத்’ உரையில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
அரசு பள்ளிக்கு இளநீர் விற்கும் பெண்ணின் நிதி உதவி - ‘மன் கீ பாத்’ உரையில் பிரதமர் பாராட்டு
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் சின்னவீரப்பட்டியைச் சேர்ந்தவர் தாயம்மாள். இவர் தனது கணவர் ஆறுமுகத்துடன் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், ஒருநாள் ஊரில் உள்ள அரசு பள்ளி வழியாக செல்லும் போது, பள்ளிக்கட்டிட செலவுக்கு நிதி தேவைப்படுவதாக பள்ளி தலைமை ஆசிரியருடன் ஆசிரியர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுள்ளார்.

இதனையடுத்து தனது செலவில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை பள்ளி கட்டிட பணிக்கு நிதி உதவியாக அவர் அளித்தார். இதற்காக பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் இதனை குறிப்பிட்ட பிரதமர் மோடி, பள்ளிக்கு நிதி உதவி அளித்ததற்காக தாயம்மாளுக்கு பாராட்டு தெரிவித்தார். இது குறித்து பேசிய தாயம்மாள், தனக்கு பாராட்டு தெரிவித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், கோவிலைப் போல் நினைத்து பள்ளிக்கு நிதி உதவி அளித்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் பணம் உள்ளவர்கள் அரசு பள்ளிகளுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com