மர்மமான முறையில் உயிரிழந்த இளம்பெண் - 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த கணவர் கைது

மனைவியை கொலை செய்து விட்டு 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
மர்மமான முறையில் உயிரிழந்த இளம்பெண் - 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த கணவர் கைது
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே, இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், 7 மாதங்களுக்குப் பிறகு அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். ஆலம்பாடி மாமலைவாசன் என்பவரின் மனைவி அபிநயா. இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார். இந்த நிலையில் அபிநயா அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூறாய்வில் தெரியவந்தது.

இதையடுத்து பேலீசார் அதனை கொலை வழக்காக பதிவு செய்தனர். இந்த வழக்கில், கடந்த 7 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த அபிநயாவின் கணவர் மாமலைவாசனை போலீசார் கைது செய்தனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், அபிநயாவை மாமலைவாசன் அடித்துக் கெலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com