உத்தரகாண்டில் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து : பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

உத்தரகாண்ட்டில் உள்ள தெஹ்ரி மாவட்டத்தில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளி வாகனம் ஒன்று விபத்துக்குள்ளனது.
Published on

தெஹ்ரி,

இன்று காலை உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கார்வால் பகுதியில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளி வாகனம் ஒன்று ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த 10 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் அனைவரும் கங்சாலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அனைவரும் 4 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com