அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அரசு கவிழும் சூழல் எதுவும் இல்லை.
அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?
Published on

மும்பை,

மராட்டிய சட்டசபையில் மொத்தம் 288 இடங்கள் உள்ளன. தற்போதைய ஆளும்கட்சியான மகாயுதி கூட்டணி சுமார் 235 இடங்களுடன் அசுர பலத்தில் உள்ளது. அஜித்பவார் உயிரிழந்து விட்ட நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

அஜித்பவார் மறைவால் தேசியவாத காங்கிரசில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால் மகாயுதி கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்படுமா? என்ற யூகங்கள் எழாமல் இல்லை.

அரசின் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில் அஜித்பவாரின் 40 எம்.எல்.ஏ.க்கள் இல்லாமலும் கூட, பா.ஜனதாவை சேர்ந்த 132 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சிவசேனாவை சோந்த 57 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 189 இடங்களுடன் கூட்டணி அரசு பலமாக உள்ளது. எனவே, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அரசு கவிழும் சூழல் எதுவும் இல்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com