கேரளா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் வந்து இந்த அலுவலகத்தின் மீது  பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர்.

இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த வித பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படவில்லை. கட்சி அலுவலகத்தில் குண்டு வீசியதை அறிந்த தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாபு போடப்பட்டுள்ளது.

கட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குற்ப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com