

கீவ்,
ரஷிய படைகளுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான பதற்றமான போர் சூழலுக்கு மத்தியில், 5,200 உக்ரேனியர்கள் மனிதாபிமான தாழ்வாரங்கள் வழியாக நேற்று வெளியேற்றப்பட்டனர் என்று உக்ரைனின் ஊடகமான தி கிவ் இன்டிபென்டன்ட் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக்கின் கூறியிருப்பதாவது, 10 மனிதாபிமான தாழ்வாரங்கள் வெற்றிகரமாக இருந்தன.4,000 பேர் மரியுபோலிலிருந்து வெளியேற முடிந்தது என்றார்.
இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைனில் உள்ள ரிவ்னே பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. லிவிவ் நகரம் மீது எண்ணெய் கிடங்கை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
லிவிவ் பகுதியில் உள்ள எரிபொருள் உள்கட்டமைப்பு மீது ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ல்விவ் மாகாண கவர்னர் மக்சிம் கோசிட்ஸ்கி கூறினார். அதில் ஐந்து பேர் காயமடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
செர்னோபிலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்காக கட்டப்பட்ட வடக்கு உக்ரைனில் உள்ள நகரமான ஸ்லாவுட்டிச் ரஷியப் படைகளால் கைப்பற்றப்பட்டது என்று தெரிவிக்கப்படுள்ளது.
உக்ரைனில் உள்ள சுமி ஒப்லாஸ்டில் உள்ள ட்ரோஸ்டியானெட்ஸ் நகரம் ரஷிய படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்டது.
வடக்கு சுமி மாகாணத்தில் அமைந்துள்ள இந்த நகரம், மார்ச் 1 அன்று ரஷியப் படைகளால் கைப்பற்றப்பட்டது. மார்ச் 26 அன்று உக்ரேனின் கீழ் ட்ரோஸ்டியானெட்ஸ் மீண்டும்திரும்பியது, என்று உக்ரைனின் ஊடகமான தி கிவ் இன்டிபென்டன்ட் தெரிவித்துள்ளது.