சவுதி அரேபியா மீதான தாக்குதல்கள்: அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பலப்படுத்தப்படும் - வெள்ளை மாளிகை

சவுதி அரேபியா மீதான தாக்குதல்களுக்கு, அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பலப்படுத்தப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜெட்டா,

சவுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஏமனின் ஹவுதி படைகள் ஏவுகணையை வீசியதாக ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார், ஆனால் சவுதி அதிகாரிகளிடமிருந்து உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை. இத்தாக்குதலில் அரம்கோவில் உள்ள ஒரு நிலையம் வெடித்து சிதறியதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலிலிருந்து சவுதி அரேபியா தன்னை தற்காத்துக்கொள்வதற்கு அந்த நாட்டுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்த ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்கும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com