

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கடந்த 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு 133 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்றது.
அதே சமயம் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பி.எம்.எல்.-என் கட்சிக்கு 75 இடங்களும், பி.பி.பி. கட்சிக்கு 54 இடங்களும், எம்.க்யூ.எம்.-பி கட்சிக்கு 17 இடங்களும் கிடைத்தன.
நாடாளுமன்றத்தேர்தலுக்குப்பின் பிரதமர் தேர்வில் இழுபறி நீடித்த நிலையில் பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் 2-வது முறையாக பதவியேற்றுக்கொண்டார். நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் 69 இடங்களை வென்ற நிலையில் அக்கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகி உள்ளார். ஷெபாஸ் ஷெரீப்புக்கு ஆதரவாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 201 வாக்குகள் பதிவானதாக சபாநாயகர் அறிவித்தார்.