ரஷ்யா மீதான பொருளாதார தடைகளால் கென்யாவில் ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பு

சர்வதேச தடைகள் காரணமாக ரஷியாவுடன் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா மீதான பொருளாதார தடைகளால் கென்யாவில் ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பு
Published on

நைரோபி,

உக்ரைன் மீதான் ரஷியாவின் போர் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக சர்வதேச பணம் செலுத்துதல் அமைப்பு முறையில் இருந்து ரஷியாவை விலக்கி வைத்திருப்பதால், ரஷியாவுடன் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் ஆப்பிரிக்க நாடான கென்யாவின் முக்கிய ஏற்றுமதி சந்தையாக ரஷியா உள்ளது. கென்யாவில் இருந்து ஏஞ்ஜியா ரோஸ் உள்ளிட்ட பல்வேறு வகை மலர்கள் ராஷியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் ரஷியாவின் மீதான பொருளாதார தடை காரணமாக கென்யாவில் உள்ள மலர் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலர் தொழிலை தவிர கென்யாவில் தேயிலை தொழிலும் பாதிப்பை சந்தித்துள்ளது. கென்யாவின் தேயிலை உற்பத்தி அளவில் 5 சதவீத பங்கு ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு ரஷியா ஒரு பெரிய சந்தையாக கருதப்படுகிறது. தற்போதைய சூழலில், கென்யாவில் ஆண்டுக்கு சுமார் 87 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதி வர்த்தகம் தடைப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com