எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம் - இம்ரான் கட்சி அறிவிப்பு

புதிய நாடாளுமன்றத்தில் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக பி.டி.ஐ. செயல்படும் என இம்ரான் கட்சி அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம் - இம்ரான் கட்சி அறிவிப்பு
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 133 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆனால் தேர்தலில் எந்த கட்சிக்கும் இந்த பெரும்பான்மை பலம் கிடைக்காததால் புதிய அரசு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே கூட்டணி அரசு அமைப்பதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி உள்ளன.

பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களைக் (101) கைப்பற்றியிருந்தாலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர் கோஹர் அலி கான் கூறியதாவது:

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி (பி.பி.பி.) ஆகிய இரு கட்சிகளுடனும் எங்களுக்கு கொள்கை முரண் உள்ளது. எனவே, இதில் எந்தக் கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம். அதைவிட, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துவிடலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

புதிய நாடாளுமன்றத்தில் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக பி.டி.ஐ. செயல்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com