பாகிஸ்தானை விட பல துறைகளில் இந்தியா முன்னேறிவிட்டது : ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தானை விட பல துறைகளில் இந்தியாமுன்னேறிவிட்டது ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை விட பல துறைகளில் இந்தியா முன்னேறிவிட்டது : ஷெபாஸ் ஷெரீப்
Published on

இஸ்லாமாபாத்,

லண்டன் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பில் 4 வீடுகளை அவர் ஊழல் செய்த பணத்தில் வாங்கினார் எனும் வழக்கில் ஷெரிப் மீதான குற்றாச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 10 ஆண்டுகள் தண்டனையும், அவரது மகள் மர்யம் நவாஸ்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது லண்டனில் உள்ள நாவாஸ் மற்றும் அவர்து மகள் இருவரும் மீண்டும் பாகிஸ்தான் திரும்பும் பட்சத்தில் அவர்கள் மீது கைது நடவடிக்கைகள் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரும் பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷெபாஸ் ஷெரீப் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களிடம் கூறியதாவது: -

நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்குகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை ஆகும். அவர் மீதான வழக்குகளுக்கு ஆதாரம் இல்லை என நீதிமன்றமே தெரிவித்திருந்தது. இந்நிலையில், லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பும் அவரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. என்ன ஆனாலும் நாளை நவாஸ் மற்றும் அவரது மகள் இருவரும் பாகிஸ்தான் வந்தடைவார்கள். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை சந்திக்க அவர்கள் தயாராக உள்ளனர்.

இந்தியா பல்வேறு துறைகளில் பாகிஸ்தானை விட முன்னேறிய நாடாக விளங்குகிறது. நம்மை விட பின் தங்கிய நிலையில் இருந்த இலங்கை, வங்காளதேசம் போன்ற நாடுகள் எல்லாம் வளர்ச்சியில் நம்மை பின்னுக்கு தள்ளிவிட்டன. நாம் பாடம் கற்காவிட்டால் கடவுள்தான் காப்பற்ற வேண்டும். இந்தியாவில் ஊழல் செய்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் அதன் மாநில முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் மீது துணிச்சலான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் ஊழல் செய்தவர்கள் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள். அடுத்த தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். ஊழலை ஒழிப்பதில் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்க வேண்டும்.

பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது, பங்கு பரிவர்த்தனைகள் குறைந்துவிட்டது, நமது நாட்டின் கையிருப்பை வைத்து நம்மால் ஒரு மாதம் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும். பாகிஸ்தானில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் இப்போது வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com