பாகிஸ்தானில் ராணுவ தளத்தில் பயங்கர வெடிவிபத்து

பாகிஸ்தானில் ராணுவ தளத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ராணுவ தளத்தில் பயங்கர வெடிவிபத்து
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியால்கோட் நகரில் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்துள்ளது. இது அந்த நாட்டில் உள்ள ராணுவ தளங்களில் மிகவும் பழமையான மற்றும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை இந்த ராணுவ தளத்தில் பயங்கர வெடிவிபத்து நேரிட்டது. இதில் அங்கு தீப்பற்றி எரிந்ததால் வானுயுரத்துக்கு கரும் புகை மண்டலம் எழுந்தது.

ராணுவ தளத்தில் இருந்து அடுத்தடுத்து வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தாக அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் ராணுவ தளத்தில் தீப்பற்றி எரியும் வீடியா மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்கில் பகிர்ந்தனர்.

இந்த விபத்து குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகாத நிலையில் ராணுவ தளத்தில் உள்ள ஆயுத கிடங்கில் வெடிவிபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்தும் உடனடி தகவல்கள் இல்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com