

நியூயார்க்,
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐநா பொதுச்சபையின் 74 வது கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் இன்று இரவு 8 மணியளவில் உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பிரதமர் மேடி ஐநா பெதுச்சபை கூட்டத்தில் பேசுவது இது 2 வது முறையாகும்.
இதற்கு முன் 2014ம் ஆண்டும் அவர் ஐநா பெதுச் சபையில் பேசியுள்ளார். பிரதமர் மேடியை தெடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பேச உள்ளார்.
காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வரும் நிலையில் இங்கும் இம்ரான் கான் அப்பிரச்னை குறித்து பேசுவார் எனத் தெரிகிறது. எனினும் காஷ்மீர் குறித்து பிரதமரின் உரையில் எத்தகவலும் இடம் பெறாது என இந்தியா ஏற்கனவே தெரிவித்துள்ளது.