

வாஷிங்டன்
ஹண்ட்ஸ்மேன் தூதராக மட்டுமின்றி டிரம்ப் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதா என்பதையும் விசாரிப்பார்.
ஹண்ட்ஸ்மேன் 2009 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை சீனாவிற்கான அமெரிக்க தூதராக பணியாற்றியுள்ளார். பின்னர் 2012 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட்ட குடியரசுக்கட்சி வேட்பாளர்களுள் ஒருவராக இருந்தார்.
ஹாம்பர்க்கில் டிரம்ப்-புடின் இரண்டாம் சந்திப்பு நடந்ததா?
ஜி 20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடினை அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாவது முறை ரகசியமாக சந்தித்து பேசியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இரண்டாம் சந்திப்பு எப்போது, எங்கு, எவ்வளவு நேரம் நடந்தது; என்ன பேசப்பட்டது என்பது பற்றி வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவிக்கவில்லை.
ஜூலை 7 ஆம் தேதி இருவரும் சந்தித்து இரண்டு மணி நேரம் பேசினர். அப்போது டிரம்பிடம் தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடச் சொல்லி ஆணையிடவில்லை என புடின் தெரிவித்ததாகவும் சொல்லப்பட்டது.