ஸ்பெயினில் பாதசாரிகள் மீது வேன் மோதியது பயங்கரவாத தாக்குதல்: போலீஸ் தகவல்

ஸ்பெயினில் பாதசாரிகள் மீது வேன் மோதியது பயங்கரவாத தாக்குதல் என்று அந்நாட்டு போலீஸ் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஸ்பெயினில் பாதசாரிகள் மீது வேன் மோதியது பயங்கரவாத தாக்குதல்: போலீஸ் தகவல்
Published on

பார்சிலோனா,

பார்சிலோனா நகரில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது வேன் திடீரென மோதியது. இதில் பீதி அடைந்த மக்கள் அங்கும் இங்கும் ஓடினர். இந்த வாகன தாக்குதலில் இருவர் பலியானதாகவும் பலர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்சிலோனாவில் உள்ள ப்லகா கடலுன்யா பிளாசா அருகே இந்த வாகன தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. மக்கள் மீது வாகனத்தை செலுத்திவிட்டு வேனின் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தின் முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று போலீஸ் குறிப்பிட்டதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை முதல் வாகனங்கள் மூலம் ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவது அடிக்கடி நிகழும் ஒன்றாக அமைந்துள்ளது. நீஸ், பெர்லின், லண்டன், ஸ்டாகோல்ம் ஆகிய இடங்களில் நடைபெற்ற இத்தகைய தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் பார்சிலோனாவுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு எதிராக அச்சுறுத்தும் வகையில் ஓவியங்கள் தீட்டப்பட்டு இருந்தது நினைவுகூறத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com