கஞ்சமலை ஈஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம்

கஞ்சமலை ஈஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம்
கஞ்சமலை ஈஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம்
Published on

குடவாசல் அருகே சித்தாடி காத்தாடி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள கஞ்சமலை ஈஸ்வரருக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவாரத்தில் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை 2-வது சோமவாரத்தையொட்டி நேற்று 108 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கும்பகோணம் ஆகம பாடசாலை சுவாமிநாத சிவாச்சாரியார், கோவில் அர்ச்சகர் வினோத் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜையில் 108 சங்குகளில் புனித தீர்த்தங்களை நிரப்பி கஞ்சமலை ஈஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com