வித்தியாசமான சிற்பம்

கர்நாடக மாநிலம் ஹம்பி என்ற புராதன சிறப்புமிக்க இடத்தின் அருகே ஆனேகுந்தி என்ற ஊரில் துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்திருக்கிறது நவ பிருந்தாவனம்.
வித்தியாசமான சிற்பம்
Published on

இங்கே மத்வாச்சாரியாரின் நேரடி சீடரான பத்மநாப தீர்த்தரின் வழிவந்த சீடர்களின் ஜீவ சமாதிகள் இருக்கின்றன. இங்கு அமைந்த அனுமன் சிற்பத்தைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். இந்த அனுமன் இரு கரங்களாலும் ஓலைச் சுவடியை பிடித்தபடி வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார்.

இந்த சிற்பம் அனுமன் பீமன் மத்வாச்சாரியார் ஆகியோரது தோற்றத்தை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது. முகம் அனுமனை போன்றும் தோள்கள் பீமனின் வலிமையை பறைசாற்றும் விதத்திலும் ஓலைச்சுவடி தாங்கிய கரங்கள் அனுமனின் அவதாரமாக கருதப்படும் மத்வாச்சாரியாரின் திருக்கோலத்தை உணர்த்துவதாகவும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com