நாளை ஆடிப்பிறப்பு.. முக்கிய விசேஷ நாட்கள், விரத நாட்கள் விவரம்

கோவில்களில் ஆடி மாத திருவிழாவிற்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்யத் தொடங்கி உள்ளனர்.
நாளை ஆடிப்பிறப்பு.. முக்கிய விசேஷ நாட்கள், விரத நாட்கள் விவரம்
Published on

பண்டிகைகளின் தொடக்க மாதமான ஆடி மாதம் நாளை (17.7.2025) பிறக்கிறது. அம்மன் வழிபாட்டிற்கு உகந்த இந்த மாதத்தில் ஒவ்வொரு வெள்ளியும், செவ்வாயும் பொன்னான திருவிழா நாட்கள். அம்மனின் அருளை பெறுவதற்கு கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல், பெங்கல் வைத்தல், மாவிளக்கு படைத்தல், பால் குடம் ஏந்தி வருதல், தீ மிதித்தல் ஆகிய வழிபாடுகளுக்கு பக்தர்கள் தயாராகி வருகின்றனர். கோவில்களில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்யத் தொடங்கி உள்ளனர்.

பல்வேறு ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விசேஷ நாட்கள் மற்றும் விரத நாட்கள் குறித்த விவரங்களை பார்ப்போம்.

2025 ஆடி மாத விசேஷ நாட்கள் :

ஜூலை 24- ஆடி அமாவாசை

ஜூலை 28- ஆடிப்பூரம், நாக சதுர்த்தி

ஜூலை 29- கருட பஞ்சமி ,நாக பஞ்சமி

ஆகஸ்ட் 03- ஆடிப்பெருக்கு

ஆகஸ்ட் 07- ஆடித்தபசு

ஆகஸ்ட் 08- வரலட்சுமி விரதம்

ஆகஸ்ட் 09- ஆவணி அவிட்டம்

ஆகஸ்ட் 10- காயத்ரி ஜபம்

ஆகஸ்ட் 12- மகா சங்கடஹர சதுர்த்தி

ஆகஸ்ட் 16- கேகுலாஷ்டமி

ஆடி மாத விரத நாட்கள்:

ஜூலை 20 -கிருத்திகை

ஜூலை 21- ஏகாதசி

ஜூலை 22- பிரதேஷம்

ஜூலை 23- சிவராத்திரி

ஜூலை 24- அமாவாசை

ஜூலை 28- சதுர்த்தி

ஜூலை 30- சஷ்டி

ஆகஸ்ட் 05- ஏகாதசி

ஆகஸ்ட் 06- பிரதேஷம்

ஆகஸ்ட் 08- திருவேணம், பெளர்ணமி

ஆகஸ்ட் 12- சங்கடஹர சதுர்த்தி

ஆகஸ்ட் 14- சஷ்டி

ஆகஸ்ட் 16- கிருத்திகை

ஆடி மாத அஷ்டமி, நவமி மற்றும் கரி நாட்கள்:

ஜூலை 17-அஷ்டமி

ஆகஸ்ட் 01-அஷ்டமி

ஆகஸ்ட் 16-அஷ்டமி

ஜூலை 18-நவமி

ஆகஸ்ட் 02-நவமி

ஜூலை 18-கரி நாள்

ஜூலை 26-கரி நாள்

ஆகஸ்ட் 05-கரி நாள்

ஜூலை 27 ஆம் தேதி வாஸ்து நாள். அன்றைய தினத்திற்கான வாஸ்து நேரம் காலை 07.44 முதல் 08.20 வரை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com