

திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து செல்கின்றனர்.
இதனிடையே, பவுர்ணமி தினங்களில் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்வது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், இன்று ஆடி பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.