கிருஷ்ணரின் அஷ்ட வடிவங்கள்

மகாவிஷ்ணு, தேவர்களுக்காகவும், மனிதர்களுக்காகவும் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் 10 அவதாரங்கள், ‘தசாவதாரங்கள்’ என்று சிறப்பிக்கப்படுகின்றன. அந்த 10 அவதாரங்களிலும் பல லீலைகள் கொண்டதாகவும், சிறப்புக்குரியதாகவும் கருதப்படுவது கிருஷ்ண அவதாரம். அந்த கிருஷ்ண பகவானின் எட்டு வடிவங்கள், பெருமைக்குரியதாக போற்றப்படுகிறது. அதனை இங்கே பார்க்கலாம்.
கிருஷ்ணரின் அஷ்ட வடிவங்கள்
Published on

சந்தான கோபால கிருஷ்ணன்:- யசோதையின் மடியிலே பாலகனான கிருஷ்ணர் அமர்ந்திருக்கும் கோலம் இது.

பாலகிருஷ்ணன்:- பாலகனாக கிருஷ்ணர் தவழும் கோலம் இது. ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னிதிகளிலும், பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம்.

காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் கிருஷ்ணரின் வடிவம் இது.

கோவர்த்தனதாரி: கோவர்த்தன கிரி என்னும் பெயர் கொண்ட மலையை, கிருஷ்ண பகவான் தன்னுடைய சுண்டு விரலால் தாங்கி நிற்கும் திருக்கோலம் இது.

ராதா கிருஷ்ணன் (வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பாக வைத்து, தன் அருகில் ராதை நின்றிருக்க குழலூதும் கோலத்தில் அருளும் கிருஷ்ணனின் வடிவம் இது.

முரளீதரன்: கிருஷ்ணர், தன்னுடைய பட்டத்து ராணிகளில் முதன்மையானவர்களான ருக்மணி மற்றும் சத்யபாமா ஆகியோருடன் நின்றிருக்கும் திருக்கோலம் இது.

மதனகோபாலன்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணனின் வடிவம் இது.

பார்த்தசாரதி: தேரின் மீது அர்ச்சுனன் அமர்ந்திருக்க, தேரில் பூட்டப்பட்ட குதிரைகளின் கயிற்றைப் பிடித்தபடி தேரின் முன்பாக அமர்ந்திருக்கும் கிருஷ்ணனின் திருக்கோலம் இது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com