ஆவணி அவிட்டம்.. திருத்தணி முருகன் கோவிலில் இன்று மதியம் நடை அடைப்பு

மாலை 3.30 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
ஆவணி அவிட்டம்.. திருத்தணி முருகன் கோவிலில் இன்று மதியம் நடை அடைப்பு
Published on

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் நடை இன்று (9.8.2025) மதியம் அடைக்கப்படுகிறது. இன்று நண்பகல் 12 மணி முதல் 3.30 மணி வரை நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படாது.

அந்த நேரத்தில் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் தலைமை குருக்கள் ஆகியோர் பூணூல் மாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மாலை 3.30 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணி அவிட்டநாள் வேதங்கள் அவதரித்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் பெருமாள் ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து, வேதங்களை அசுரர்களிடம் இருந்து மீட்டதாகவும் புராணங்கள் செல்கின்றன. அதனால் இதை ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கெண்டாடுவதுண்டு.

பூணூல் அணியும் பழக்கம் உள்ளவர்கள், குறிப்பாக பிராமண குலத்தவர்கள் இந்த நாளில் நீர்நிலைகளின் அருகில் அல்லது ஏதேனும் ஒரு கோவிலில் ஒரு குழுவாக சேர்ந்து புரோகிதர் மந்திரம் சொல்ல பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து கொள்வார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com