குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

குன்றத்தூரில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்
Published on

பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரால் குன்றத்தூரில் கட்டப்பட்ட நாகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் நவகிரக ஸ்தங்களில் ராகு ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 1-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

இன்று தேர்த் திருவிழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். அமைச்சர் தா.மோ. அன்பரசன் தேரின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

நிலையத்தில் இருந்து புறப்பட்ட தேர், நான்கு மாட வீதி வழியாக பவனி வந்தது. தேர் சென்ற வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம், மோர், குளிர்பானம் வழக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com