ஓசூர் பிரத்யங்கிரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்

பிரத்யங்கிரா தேவி முன்பு வளர்க்கப்பட்ட யாக குண்டத்தில் மிளகாய் வத்தல் போட்டு திருஷ்டிகள் நீங்கவும், அனைவரும் நலமுடன் வாழவும் அம்மனை வேண்டி வழிபட்டனர்.
Published on

ஓசூர் மோரனப்பள்ளி பகுதியில் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பௌர்ணமி நாளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மிளகாய் வத்தல் யாகம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு நேற்று பிரத்யங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து திருஷ்டிகள் நீங்கி மக்கள் நலமுடன் வாழ மிளகாய் வத்தல் யாகம் நடந்தது. இந்த வழிபாட்டில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவரது குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரத்யங்கிரா தேவி முன்பு வளர்க்கப்பட்ட மகா யாகத்தில் மிளகாய் வத்தல் போட்டு திருஷ்டிகள் நீங்கவும், அனைவரும் நலமுடன் வாழவும் அம்மனை வேண்டி வழிபட்டனர்.

நடிகை ஷில்பா மஞ்சுநாத், தமிழில் விஜய் ஆண்டனி நடித்த 'காளி' படத்தில் கதாநாயகியாகவும், வலை, சிங்க பெண்ணே, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பேரழகி ஐ.எஸ்.ஓ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com