கோவை: பெருமாள் கோவில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பகவானை தரிசனம் செய்தனர்.
Published on

புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும், வளமான வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதிலும் பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமைகளில் பக்தர்கள் விளக்கு ஏற்றியும், தளிகை போட்டும் பெருமாளை வழிபடுகிறார்கள். புரட்டாசி 2-வது சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது.

கோவை உக்கடத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். இதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலை முதலே பக்தர்கள் கோவிலில் உள்ள மண்டபத்தில் சுவாமிக்கு விளக்கேற்றி வழிபட்டனர். மூலவருக்கு அதிகாலை நேரத்தில் சிறப்பு அபிகேஷம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது.

சீனிவாச பெருமாள் கோவில்

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசபெருமாளை திரளான பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.

இதேபோன்று கோவை ராமநாதபுரத்தில் உள்ள நரசிங்கபெருமாள் கேவிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டு சென்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com