கும்மிடிப்பூண்டி: புதுப்பாளையம் ஆறுமுக சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா

மண்டலாபிஷேக நிறைவு நாளான இன்று மகா பூர்ணாஹுதி, சங்கல்பம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
கும்மிடிப்பூண்டி: புதுப்பாளையம் ஆறுமுக சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா
Published on

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுப்பாளையம் கிராமத்தில் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகசாமி திருக்கோவில் உள்ளது. 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில் உள்ள மூலவர் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகசாமி மரகத கல்லால் ஆன சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு சிறப்புமிக்க இத்திருக்கோவிலில் வலம்புரி விநாயகர், சிவபெருமான், நாகாத்தம்மன், நவகிரகங்கள், வழித்துணை விநாயகர் ஆகிய பிரகார மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து கடந்த ஜூலை மாதம் 7-ம் தேதி திங்கட்கிழமை காலை மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து 48 நாட்கள் சிறப்பாக மண்டலாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன், மண்டலாபிஷேக நிறைவு நாளான இன்று மகா பூர்ணாஹூதி, சங்கல்பம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதன் பின்னர், மங்கள வாத்தியம் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள் பிரகார புறப்பாடு நடைபெற்றது. பின்னர், மூலவருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பால், தயிர், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் மகா அபிஷேகம், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகசுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com