கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல் திறப்பு.. முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு

ஆராட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரளான பக்தர்கள், கிழக்கு வாசல் வழியாக சென்று அம்மனை தரிசித்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல் திறப்பு.. முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு
Published on

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. இந்த திருவிழா நிறைவு பெற்றதையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு நள்ளிரவு 1 மணியளவில் முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து கோவிலின் கிழக்கு வாசல் இன்று அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டு அந்த வாசலின் நுழைவு வாயிலில் உற்சவ அம்பாளை அமர வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இந்த பூஜைகளை கோவில் மேல் சாந்தி கண்ணன் போற்றி நடத்தினார். இந்த பூஜைகள் முடிந்த பிறகு உற்சவ அம்பாள் கோவிலின் கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் பிரவேசித்த நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்காக  கோவிலின் கிழக்கு வாசல் சுமார் ஒரு மணி நேரம் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிழக்கு வாசல் வழியாக சென்று அம்மனை தரிசித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, வைகாசி விசாகம், ஆடி அமாவாசை நவராத்திரி பரிவேட்டை திருவிழா, திருக்கார்த்திகை ஆகிய 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்படும். இந்த நாட்களில் கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசிப்பது மிகவும் விசேஷமாகும் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஆராட்டு முடிந்து கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com