4-ம் தேதி கும்பாபிஷேகம்: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் தீவிரம்

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் முழுவீச்சில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
4-ம் தேதி கும்பாபிஷேகம்: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் தீவிரம்
Published on

கோவை,

கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7-ம் படை வீடு என அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2013- ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் திருப்பணிகள் முழுவீச்சில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, தான் தோன்றி விநாயகர் சன்னதி, மயில் மண்டபம், இடும்பன் சன்னதி, மூலவர் சன்னதி, பரிவார தெய்வங்களின் சன்னதி, ராஜகோபுரம், பாம்பாட்டி சித்தர் முன் மண்டபம், ஆதி மூலஸ்தானம் சன்னதி மற்றும் மலைக் கோவில் நுழைவுவாயில் என அனைத்து இடங்களிலும் வர்ணம் பூசப்பட்டு வந்தது. மீதமுள்ள இடங்களிலும் வர்ணம் பூசும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

மேலும் மூலவர் சன்னதியின் ஈசானிய மூலையில் யாகங்கள் வளர்ப்பதற்காக மிக பிரமாண்டமாக யாகசாலை மண்டபம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது அந்த பணிகளும் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சித்தர் கோவில் முன்பு மண்டபம் கட்டும் பணிக்கு பூமிபூஜை போடப்பட்டது. புதிய ராஜகோபுரம் நுழைவுவாயிலில் புதிய கோபுரங்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் கோவிலில் ரூ.1 கோடியில் புதிதாக வசந்த மண்டபம் கட்டும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com