

சிவபெருமான் தனது உடலில் சரிபாதியை பார்வதிதேவிக்குத் தந்து, அர்த்தநாரீஸ்வரர் என்ற வடிவம் கொண்டார் என்கிறது புராணங்கள்.
சிவபெருமானிடம் இடப் பாகம் வேண்டி, பார்வதி தேவி இருந்த விரதமே கேதாரீஸ்வரர் விரதம் என்றும், பார்வதிக்கு கவுரி என்ற இன்னொரு பெயர் இருப்பதால் கேதார கவுரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.