பெரும்பாக்கம் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா- அர்ஜுனன் தபசு

அர்ஜுனன் வேடமணிந்தவர், தபசு மரத்தின் மீது ஏறி நின்று வீசிய எலுமிச்சம் பழங்களை கிராம மக்கள் பிடித்தனர்.
பெரும்பாக்கம் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா- அர்ஜுனன் தபசு
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா வைகாசி மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

தினந்தோறும் ஆன்மிக சொற்பொழிவு, மஹாபாரதம் தெருக்கூத்து நாடகம் நடைபெறுகின்றன. இதில், முக்கிய நிகழ்ச்சியான அர்ஜுனன் தபசு இன்று விமரிசையாக நடைபெற்றது. அர்ஜுனன் வேடமிட்ட நாடக கலைஞர், 90 அடி உயரம் கொண்ட தபசு மரத்தில் ஏறி (பனை மரத்தால் செய்யப்பட்டது), ஒற்றை காலில் சூரிய பகவானை நோக்கி தவம் செய்த பின் தபசு மரத்திலிருந்து எலுமிச்சம் பழங்களை பக்தர்களை நோக்கி வீசினார். அப்படி வீசும் பழங்களை கீழே திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பிடித்துக்கொண்டனர். பெண்கள் தங்கள் முந்தானையில் எலுமிச்சை பழங்களை பிடித்தனர்.

இந்த எலுமிச்சை கனியை திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குடும்பத்தில் பிரச்சினைகள் உள்ளவர்கள் பெற்றால் அவர்களின் குறைகள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

இந்த வினோத திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு எலுமிச்சை கனிகளைப் பிடித்து, சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com