உலக நலனுக்காக பழனி முருகன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

யாகபூஜையில் வைக்கப்பட்ட புனித நீரால் உச்சிக்காலத்தில் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
உலக நலனுக்காக பழனி முருகன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
Published on

மாசி மகத்தை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி பழனி முருகன் கோவிலில் இந்த ஆண்டு மாசி மகத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

கோவிலில் உள்ள பாரவேல் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களை சங்குகளில் வைத்து உலக நலன், அமைதி மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர் யாகபூஜையில் வைக்கப்பட்ட புனித நீரால் உச்சிக்காலத்தில் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com