ஐயப்பனுக்கான நைவேத்தியம்

சபரிமலை ஐயப்பனுக்கு கதலிப்பழம், தேன், சர்க்கரை சேர்த்து செய்த ‘திருமதுரம்’ என்னும் உணவு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
ஐயப்பனுக்கான நைவேத்தியம்
Published on

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக, ஆராதனைகள் செய்து விட்டு, மீண்டும் நடை அடைக்கப்பட்டு விடும்.

ஐயப்பனுக்கு அதிகாலை பூஜையில் திருநீறு, சந்தனம், பால், தேன், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் தூய நீ ஆகிய எட்டுப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். பின்னர் கதலிப்பழம், தேன், சர்க்கரை சேர்த்து செய்த 'திருமதுரம்' என்னும் உணவு ஐயப்பனுக்கு நைவேத்தியமாக படைக்கப்படும். தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெறும். உச்சிகால பூஜையின் போது இடித்துப் பிழிந்த பாயசத்தை நைவேத்தியமாக படைப்பார்கள். இதில் தேங்காய்ப்பால், கதலிப்பழம், சர்க்கரை, சம்பா பச்சரிசி, சுக்கு, நெய் சேர்க்கப்பட்டிருக்கும். இதற்கு 'மகா நைவேத்தியம்' என்று பெயர். கலச பூஜையின் போது அரவணை, பச்சரிசி சாதம், இரவு பூஜையில்

அப்பம், பச்சரிசி சாதம், பானகம் படைக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com