திருவள்ளூரில் நவராத்திரி விழா ஆரம்பம்... களைகட்டிய கொலு வழிபாடு

நவராத்திரி நாட்களில் பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபடுவார்கள்.
திருவள்ளூரில் நவராத்திரி விழா ஆரம்பம்... களைகட்டிய கொலு வழிபாடு
Published on

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவில் முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியை போற்றியும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அவ்வகையில் இந்த ஆண்டின் நவராத்திரி விழா இன்று தொடங்கியது. நவராத்திரி விழாவையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பல கோவில்களில் 9 படிகள் அமைத்து பெருமாள், அம்மன், விநாயகர், முருகன், கிருஷ்ணர், கல்யாண வைபோகம், கலை நிகழ்ச்சி மற்றும் பள்ளிக்கூடம் என விதவிதமான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.

நவராத்திரி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கோவிலில் பக்தர்கள் இந்த கொலு பொம்மைகளை பார்வையிட்டதுடன் வழிபட்டு சென்றனர்.

மேலும் நவராத்திரி நாட்களில் பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபடுவார்கள். மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலன்களும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

கெலு வைத்து நவராத்திரியை கெண்டாடுபவர்கள், விதவிதமான கொலு பொம்மைகளை வைத்து அதற்கு பூஜை செய்து தங்களது வீடுகளில் வழிபாட்டை தொடங்கி உள்ளனர். திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் அருகே டாக்டர் சாரதி ஸ்ரீதேவி வீட்டில் வைத்திருந்த கொலு அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com