இந்த வார விசேஷங்கள் - 24-9-2019 முதல் 30-9-2019 வரை

29-ந் தேதி (ஞாயிறு), நவராத்திரி ஆரம்பம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு லட்சார்ச்சனை ஆரம்பம், சகல சிவன் கோவில்களிலும் நவராத்திரி தொடக்கம்.
இந்த வார விசேஷங்கள் - 24-9-2019 முதல் 30-9-2019 வரை
Published on

24-ந் தேதி (செவ்வாய்)

சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.

திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு கண்டருளல்.

மேல்நோக்கு நாள்.

25-ந் தேதி (புதன்)

சர்வ ஏகாதசி.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு கண்டருளல்.

கீழ்நோக்கு நாள்.

26-ந் தேதி (வியாழன்)

பிரதோஷம்.

சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

சகல சிவன் கோவில்களிலும் இன்று மாலை நந்தீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.

கீழ்நோக்கு நாள்.

27-ந் தேதி (வெள்ளி)

மகாளய கேதார விரதம்.

மாத சிவராத்திரி.

திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை.

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.

கீழ்நோக்கு நாள்.

28-ந் தேதி (சனி)

மகாளய அமாவாசை.

கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலையில் சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் உலா.

திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தல்.

மேல்நோக்கு நாள்.

29-ந் தேதி (ஞாயிறு)

நவராத்திரி ஆரம்பம்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு லட்சார்ச்சனை ஆரம்பம்.

சகல சிவன் கோவில்களிலும் நவராத்திரி தொடக்கம்.

மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் கொலு தர்பார் காட்சி.

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், அருப்புக்கோட்டை சவுடாம்பிகை, கழுகுமலை முருகன், மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி, தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், மைசூர் சாமுண்டீஸ்வரி ஆகிய தலங்களில் நவராத்திரி ஆரம்பம்.

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்காரக் காட்சி.

சமநோக்கு நாள்.

30-ந் தேதி (திங்கள்)

திருப்பதி ஏழுமலையான், தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், நாட்டரசன்கோட்டை எம்பெருமாள், குணசீலம் பெருமாள், உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார தரிசனம்.

சமநோக்கு நாள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com