ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் - களைகட்டிய திருச்செந்தூர் முருகன் கோவில்

முகூர்த்த நாளையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.
Marriages at Tiruchendur Murugan Temple
Published on

தூத்துக்குடி,

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக முகூர்த்த நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதோடு, கோவில் வளாகத்தில் திருமண நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

அந்த வகையில் இன்றைய தினம் சுபமுகூர்த்த நாள் என்பதால், திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் இன்று அதிகாலை முதல் சுமார் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை வாழ்த்துவதற்கு அவர்களின் உறவினர்களும் அதிக அளவில் வருகை தந்ததால், கோவில் வளாகம் முழுவதும் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.

இதனால் கோவில் வளாகத்திற்குள் செல்ல முடியாத மணமக்கள் சிலர், கோவிலின் முன்பகுதியிலும், பிரகாரம் உள்ளிட்ட இடங்களிலும் ஆங்காங்கே நின்றவாரு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு கடற்கரை அருகே மணமக்கள் போட்டோஷூட்களை நடத்தி வருகின்றனர்.

தற்போது திருச்செந்தூர் கடலில் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், திருச்செந்தூர் டி.எஸ்.பி. அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com