தெப்ப திருவிழா

சிவகிரியில் தெப்ப திருவிழா நடந்தது.
தெப்ப திருவிழா
Published on

சிவகிரி:

சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம், தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 25-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாள் திருவிழாவும் ஒவ்வொரு சமூகத்தினரால் நடத்தப்பட்டது. இதன்பின்னர் தேரோட்டம் நடந்தது. தெப்பத்திருவிழா கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் முன் அமைந்துள்ள தெப்பத்தில் வைத்து நடைபெற்றது. முன்னதாக முத்துக்குமாரசாமி அலங்கரிக்கப்பட்டு கோவிலிருந்து எழுந்தருளி புறப்பட்டு தங்குமண்டபத்திற்கு வருகை தந்து பின்பு அங்கிருந்து தெப்பத்தேரில் வந்து அமர்ந்தார். தெப்பத்தில் 11 முறை தேர் வலம்வந்தவுடன் முடிவுற்றது.

திருவிழாவில் வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான முத்தையா பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தெப்பத்திருவிழாவை காண ராஜபாளையம, சங்கரன்கோவில், புளியங்குடி, வாசுதேவநல்லூர், கரிவலம்வந்தநல்லூர், தளவாய்புரம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com