

நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இங்கு குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குருபகவானை வழிபட்டு செல்வது சிறப்புக்குரியது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் குடமுழுக்கு நடந்து 12 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. இதையொட்டி மீண்டும் குடமுழுக்கு நடத்த அறநிலையத்துறை முன்வந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகிறது. ரூ.80 லட்சம் செலவில் ராஜகோபுரம், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன் உள்ளிட்ட சாமி சன்னதிகளில் விமானங்கள் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.