சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.57 லட்சம் உண்டியல் காணிக்கை

கோவில் அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இன்று உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.57 லட்சம் உண்டியல் காணிக்கை
Published on

பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மனை வணங்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

அப்படி வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் தங்கள் காணிக்கைகளை செலுத்துவார்கள். பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பாக மாதமிருமுறை எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதம் அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்த நிலையில், மூன்றாவது முறையாக எண்ணப்பட்டது. கோவில் அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இன்று உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.

இதில், காணிக்கையாக 57 லட்சத்து 83 ஆயிரத்து 822 ரூபாய் ரொக்கமும்,1 கிலோ 40 கிராம் தங்கமும்,1 கிலோ 974 கிராம் வெள்ளியும், 39 அயல் நாட்டு பணம் மற்றும் 1384 அயல் நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com