

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாரத்தில் \வடுகபாளையம் சக்தி விநாயகர் கோவில், பல்லடம் அங்காளம்மன் கோவில், பொன்காளியம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், சந்தைபேட்டை கோட்டை விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
விநாயகப் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சங்கடஹர சதுர்த்தி பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டனர்.