சங்கடஹர சதுர்த்தி: நாகாபரண விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்

நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சங்கடஹர சதுர்த்தி: நாகாபரண விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்
Published on

நாகை பகுதி விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகருக்கு மஞ்சள், திரவியம், பச்சரிசி, இளநீர், பால், தேன், கரும்புசாறு, பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த விநாயகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அதேபோல் விட்ட வாசல் விநாயகர், செங்கழுனி விநாயகர், வல்லபகணபதி, சாபம் தீர்த்த விநாயகர், ஏழை பிள்ளையார் கோவில், சாலமன் தோட்டம் செல்வ விநாயகர், சொக்கநாதர் கோவில் செல்வ விநாயகர், மறைமலைநகர் சித்தி விநாயகர், நாகூர் விருச்சிக விநாயகர் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com