வேலாயுதம்பாளையம் பகுதி சிவன் கோவில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு

சிவராத்திரி சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.
வேலாயுதம்பாளையம் பகுதி சிவன் கோவில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு
Published on

கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத சிவராத்திரியை முன்னிட்டு மேகபாலீஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாகவல்லி அம்பிகை, மேகபாலீஸ்வர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர்.

அதேபோல் சேங்கல் மலை வரதராஜ பெருமாள் கோவில், திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோவில், நொய்யல் அருகே சேமங்கி மாரியம்மன் கோவில் அருகே உள்ள மங்களநாதர் சமேத கமலாம்பிகை கோவில் , புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவில், குந்தாணி பாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவில் மற்றும் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் வைகாசி மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com