சனீஸ்வரன் தலையில் சிவலிங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கீழ்வில்லிவலம் என்ற ஊர் உள்ளது. இங்கு சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்திருக் கிறது. இந்த ஆலய கருவறையில் அம்மனுடன், விநாயகர், சாஸ்தா, சப்தமாதர்கள் ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர்.
சனீஸ்வரன் தலையில் சிவலிங்கம்
Published on

குழந்தைப் பேறு இல்லாத பெண்கள், இந்த அன்னையிடம் வேண்டிக் கொண்டால், விரைவில் மகப்பேறு வாய்க்கும். அதே போல் திருமணத் தடை உள்ளவர்களும் இந்த அம்மனை வழிபடலாம்.

திருக்கோடிக்காவல் தலத்தில் உள்ள சனி பகவானின் தலை பகுதியில் சிவலிங்கம் ஒன்று காணப்படுகிறது. இந்த சனீஸ்வரன் பாலசனி என்று அழைக்கப்படுகிறார். பொதுவாக சனி பகவானுக்கு காகம் தான் வாகனமாக இருக்கும். ஆனால் இங்கு கருடன் வாகனமாக இருக்கிறது.மேலும் சனி பகவானுக்கு எதிரே எமதர்மன் காட்சி தருகிறார்.

திருவெண்காடு திருத்தலத்தில் சூரியன், சந்திரன், அக்கினி தீர்த்தங்கள் உள்ளன. ஈசன் திருநடனம் புரியும்போது, அவரது கண்களில் இருந்து விழுந்த மூன்று துளி ஆனந்தக் கண்ணீரே, இங்கு மூன்று குளங்களாக இருப்ப தாக தல வரலாறு சொல்கிறது. இந்த மூன்று குளங்களிலும் குளித்து இறைவனை வழிபட்டு வந்தால் வாழும் நாளில் மன அமைதியும், இறுதியில் மோட்சமும் கிடைக்கும் என்கிறார்கள்.

காசி நகரில் விசாலாட்சி கட்டம் உள்ளது. இதன் அருகில் வராகி அம்மனுக்கு கோவில் அமைந்துள் ளது. இங்கு தினமும் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே பூஜை செய்யப்படும். பொழுது விடிவதற்குள் கோவில் நடை அடைக்கப் பட்டு விடும்.

திருவண்ணாமலை மாவட்டம் ஐயம்பாளையத் தில் மலை மீது, உத்தமராயப் பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இது மிகவும் பழமையான ஆலயம் ஆகும். பேச்சுக் குறைபாடு உள்ளவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து பெருமாளை வேண்டிக் கொண்டால் விரைவில் அந்தக் குறை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆலயத் தில் பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தேன் வழங்கப்படுகிறது. இதனை வாங்கி உட்கொண் டால், பேச்சுக் குறைபாடு நீங்குகிறதாம்.

வந்தவாசி அருகே உள்ள பேரூர் அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி விசேஷ மானவராக கூறப்படுகிறது. இந்த தட்சிணா மூர்த்தியின் கொண்டையில் பாம்பு ஒன்று சீறிப் பாய்வது போலவும், உச்சியில் கங்கை தேவி மகுடமாய் இருப்பது போலவும் அமைக்கப் பட்டுள்ளது. இதுபோன்ற தட்சிணாமூர்த்தியின் அமைப்பு மிகவும் அபூர்வமானது என்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com