சதுரகிரியில் அமாவாசை சிறப்பு வழிபாடு

சதுரகிரியில் பக்தர்கள் இன்றி அமாவாசை வழிபாடு நடைபெற்றது.
சதுரகிரியில் அமாவாசை சிறப்பு வழிபாடு
Published on

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த நிலையில் பக்தர்கள் இன்றி அமாவாசை வழிபாடு நடைபெற்றது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு சூடம் ஏற்றி சாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com