

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி குத்புசுல்தான் செய்யது இப்ராகீம் ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு திருவிழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தர்காவை சுற்றி திரளான பக்தர்கள் வலம் வந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக நடைபெறாமல் இருந்த சந்தனக்கூடு திருவிழா கொரோனா பரவல் குறைந்ததன் எதிரொலியாக இந்த ஆண்டு தான் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.