வில்லியனூர் மாதா ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா

வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தலத்தின் 147 வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றதுடன் தொடங்கியது.
வில்லியனூர் மாதா ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா
Published on

வில்லியனூர்,

வில்லியனூர் மாதா திருத்தலத்தின் 147-வது ஆண்டு திருவிழாவையெட்டி இன்று நடைபெற்ற கெடியேற்ற நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கெண்டனர்.

புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூரில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்திபெற்ற தூய லூர்தன்னை திருத்தலத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6-ம் நாளில் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். அதன்படி வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தலத்தின் 147 வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றதுடன் தொடங்கியது.

காலை 5.30 மணிக்கு ஆலயத்தில் நடைபெற்ற கூட்டு திருப்பலிக்கு பின்னர், மாதா உருவம் தாங்கிய திருக்கெடி பக்தர்கள் புடைசூழ மாதா திருக்குளத்தை சுற்றி பவனியாக கெண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர், திருத்தல முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் புதுவை - கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் திருக்கொடியேற்றி திருவிழாவை துவக்கி வைத்தார். இதில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கெண்டனர்.

இதனை தொடர்ந்து ஏப்ரல் 13-ம் தேதி வரை திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலிகள், தேர்பவனி நடைபெறுகிறது. ஏப்ரல் 14-ம் தேதி திருத்தலத்தின் 147-வது ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு திருப்பலி , அதனை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு மாதாவுக்கு வைரகிரீடம் சூட்டப்பட்டு, பெருவிழா ஆடம்பர தேர்ப்பவனி நடைபெறவிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com