நாகர்கோவில் கள்ளியங்காடு சிவன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா

கால பைரவருக்கு மஞ்சள், பால், பன்னீர், களபம், சந்தனம் போன்ற பல்வேறு பொருட்களை கொண்டு கால சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
நாகர்கோவில் கள்ளியங்காடு சிவன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா
Published on

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு பின்னர் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கிரக தோஷம், திருமண தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நீங்க, இந்த நாளில் கால பைரவருக்கு பரிகார பூஜைகள் செய்வார்கள். அவ்வகையில், ஆனி மாத தேய்பிறை அஷ்டமி தினத்தையொட்டி நாகர்கோவில் கள்ளியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் அமைந்துள்ள கால பைரவர் சந்நிதியில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காலை 10.40 மணிக்கு மஞ்சள், பால், பன்னீர், களபம், சந்தனம் போன்ற பல்வேறு பொருட்களை கொண்டு கால பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பிற்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரம், 12:30 மணிக்கு அலங்கார தீபாராதனை ஆகியவற்றை தொடர்ந்து சிவபெருமானுக்கும் மீனாட்சி அம்மனுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com