சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண வைபவத்தில் தருமபுரம் ஆதீனம் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
Published on

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரமமபுரீஸ்வரர், சட்டைநாதர், தோனியப்பர், அருள்பாலித்து வருகின்றனர்.

இக்கோவிலில் கடந்த 19ஆம் தேதி ஆடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வாக ஆடிபூரத்தை முன்னிட்டு சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

முன்னதாக திருநிலைநாயகி அம்பாள், பிரம்மபுரீஸ்வரர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் எழுந்தருள வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓதி திருமண சடங்குகள் தொடங்கின. தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டு பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் மங்கள நாணை அணிவித்து திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தனர்.

இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மொய் எழுதி சுவாமி அம்பாள் திருக்கல்யாணத்தை கண்டு மகிழ்ந்தனர். முன்னதாக மாப்பிளை அழைப்பு, பெண் அழைப்பு மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com