வாரம் ஒரு திருமந்திரம்

திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
வாரம் ஒரு திருமந்திரம்
Published on

Thirumoolar thirumanthiram |திருமூலர் இயற்றிய திருமந்திர நூலின் சிறப்பு சொல்லில் அடங்காதது. அன்பும், சிவமும் வேறு வேறு கிடையாது என்பதை உலகுக்கு எடுத்துரைத்த சிறப்புமிக்க நூல் இது. அதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

புண்ணியன் எந்தை புனிதன் இணையடி

நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது

மண்ணவர் ஆவதும் வானவர் ஆவதும்

அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.

விளக்கம்:- புண்ணிய பாருளாய் உள்ள தூயவனாகிய சிவபெருமானின் திருவடிகளை நான் அடைந்ததும், என் உள்ளத்தில் ஞானமாகிய திருவிளக்கு உண்டானது. இந்த மண்ணுலக வாழ்வு சிறப்புடன் அமைவதற்கும், அதன்பிறகான விண்ணுலக வாழ்க்கை பெருமையுடன் அமையவும் அந்தப் பெருமானின் அருள்பெற்றால்தான் முடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com