வாரம் ஒரு திருமந்திரம்

திருமந்திர நூல், சைவ நெறி நூல்களுக்கு இணையாக வைத்து போற்றப்படுகிறது. திருமூலர் இயற்றிய இந்த நூல் மூவாயிரம் பாடல்கள் கொண்டது.
வாரம் ஒரு திருமந்திரம்
Published on

அதில் இருந்து வாரம் ஒரு பாடலையும் அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும் அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

பாடல்:-

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.

விளக்கம்:-

அறிவில்லாத சிலர் அன்பும் சிவமும் வேறு என்று எடுத்துரைப்பர். அன்பே சிவமாக இருப்பதை அவர்கள் யாரும் அறியவில்லை. அன்புதான் சிவமாக இருக்கிறது என்பதை உணர்ந்த பின்னர், அனைவரும் அன்பே உருவான சிவமாக அமர்ந்திருப்பார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com